Posts

Showing posts from December, 2025

மாவிலாறு அணை உடைப்பு

Image
  மாவிலாறு அணை உடைப்பு: கங்குவேலி விவசாயிகளின் பாதிப்புகளை நேரில் ஆராய்ந்தார் விவசாயப் பணிப்பாளர் நாயகம். மாவிலாறு அணை உடைப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி விவசாய கிராமத்திற்கு, இலங்கை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் Dr. W. A. R. T. விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று (18) விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டது. கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஏற்பட்ட மாவிலாறு அணை உடைப்பு காரணமாக, மூதூர் பிரதேசத்தின் பல குடியிருப்புக்களும் விவசாய நிலங்களும் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்தன. இதில் குறிப்பாக கங்குவேலி பகுதியில் மாத்திரம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்தன. ​விவசாய நிலங்கள் மட்டுமன்றி, விவசாயிகளின் குடியிருப்புகளும் சேதமடைந்ததால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கியுள்ளதோடு, அவர்கள் இன்னும் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். ​ஜனாதிபதியின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய இடம்பெற்ற இந்த விஜயத்தில், விவசாயப் பணிப்பாளர் நாயகத்துடன் P. சிசிரகும...